கேரள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு
கேரள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு

கேரளாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளாவில் பெரும் பிரளயத்தை மழை வெள்ளம் ஏற்படுத்தியது. பல பகுதியில் நிலச்சரிவு ‌ஏற்பட்டது. கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 58 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துவிட்டனர். 

இதுவரை 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், 21 பேர் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எட்டாயிரத்து 247 குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கேரள மாநில பேரிடர் மீட்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஓணம் பண்டிகை நெருங்குவதால் அதற்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்க கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com