கேரளாமுகநூல்
இந்தியா
கேரளா: திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட யானைகள்: மோதிக்கொண்டதால் பலியான மூவர்!
அப்போது, ஒரு யானை மிரண்டு ஓடியபடி, மற்றொரு யானையை தாக்கியது. மக்கள் அலறியடித்து ஆளுக்கொரு திசையில் ஓடியதால் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கேரளாவில் கோயில் திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு யானைகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
கோழிக்கோடு மாவட்டம் கொய்லாண்டி அருகே கோயில் திருவிழாவில் யானைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, ஒரு யானை மிரண்டு ஓடியபடி, மற்றொரு யானையை தாக்கியது. மக்கள் அலறியடித்து ஆளுக்கொரு திசையில் ஓடியதால் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 25- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவிழாவில் பட்டாசு வெடித்ததால் யானை மிரண்டதாக கூறப்படும் நிலையில், யானைகள் மோதிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.