\
"ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்வு செய்தது மோசமான தவறு"- ராமச்சந்திர குகா

"ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்வு செய்தது மோசமான தவறு"- ராமச்சந்திர குகா

"ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்வு செய்தது மோசமான தவறு"- ராமச்சந்திர குகா
Published on

ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்ந்தெடுத்ததன் மூலம் கேரள மக்கள் மிக மோசமான தவறை செய்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா கருத்து தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திர குகா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 5-ஆம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தி, கடுமையாக உழைத்து தானே உயர்ந்த நரேந்திர மோடிக்கு எதிராக வெற்றி பெற வாய்ப்பே இல்லை எனக் கூறினார். சுதந்திர போராட்டத்தின்போது சிறந்த கட்சியாக இருந்த காங்கிரஸ் ஒரு குடும்ப நிறுவனமாக மாறிப் போனதும், தற்போது ஹிந்துத்துவா தலைதூக்க காரணம் என விமர்சித்தார்.

2024-இல் கேரள மக்கள் ராகுல் காந்தியை மீண்டும் தேர்ந்தெடுத்தால் நரேந்திர மோடிக்கு மேலும் சாதகமாக இருக்கும் எனவும் ராமச்சந்திர குகா‌ தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com