“அடுத்த 5 -10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்” –பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்

 “அடுத்த 5 -10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்” –பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்
 “அடுத்த 5 -10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்” –பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்

கேரளாவில் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் மீது பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான கேஜே அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும் என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய கேஜே அல்போன்ஸ், “கடந்த 25 ஆண்டுகளில் கேரளாவில் அதிகளவில் தலிபானேஷன் நடக்கிறது. அடுத்த 5-10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும்”என்றார்.

கேரள பாஜக பொதுச் செயலாளர் ஜார்ஜ் குரியன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கேரளாவின் ஜிஹாதி நடவடிக்கைகளைத் தடுக்க மத்திய அரசின் தலையீடு தேவை என்று கடிதம் எழுதினார். குரியன் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், "முஸ்லீம் அல்லாத இளைஞர்களை சிக்க வைப்பதற்காக இஸ்லாமியக் குழுக்களால் நடத்தப்படும் பல்வேறு வகையான ஜிகாத் நடவடிக்கைகள் தொடர்பாக பலா ரோமன் கத்தோலிக்க பிஷப் மார் ஜோசப் கல்லரங்கார்ட் கூறிய குற்றச்சாட்டுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்” என தெரிவித்தார். மேலும், தீவிரவாத அமைப்புகளுக்கான ஆட்சேர்ப்பு மையமாக கேரளா மாறி வருகிறது என்று சமீபத்தில் முன்னாள் போலீஸ் தலைவர் லோக்நாத் பெஹ்ரா கூறியிருப்பதையும் குரியன் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

பிஷப் ஜோசப் கல்லரங்கட் கேரளாவில் இளம் பெண்கள் பெரும்பாலும் "காதல் மற்றும் போதைப்பொருள் ஜிஹாத்" க்கு பலியாகி வருவதாக குற்றம் சாட்டினார், மேலும் இந்த தந்திரோபாயங்கள் முஸ்லிமல்லாதவர்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார். பிஷப்பின் அறிக்கைக்கு காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்தன, ஆனால் பாஜக இந்த அறிக்கையை ஆதரித்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், பிஷப்புக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கும் எண்ணம் மாநில அரசுக்கு இல்லை என்று கூறியிருந்தார். பிஷப்பின் நோக்கம் போதைப்பொருளின் தீமைகளுக்கு எதிராக தனது சமூகத்தை எச்சரிப்பதே தவிர, மதங்களுக்கிடையே பகைமையை உருவாக்கவோ அல்லது வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதோ அல்ல என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com