\
மத்திய அரசை கண்டித்து கேரளாவில் நாளை ஸ்டிரைக்

மத்திய அரசை கண்டித்து கேரளாவில் நாளை ஸ்டிரைக்

மத்திய அரசை கண்டித்து கேரளாவில் நாளை ஸ்டிரைக்
Published on: 

மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை முழு அடைப்புப் போராட்டம்  நடைபெற உள்ளது. முழு அடைப்பையொட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட வாகன போக்குவரத்து முற்றிலும் இருக்காது எனவும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றப்பட்டுவருகிறது. இதனையடுத்து பெட்ரோல் விலை நாடு முழுவதும் கணிசமாக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com