kerala congress chief shashi tharoor spoke about other options
சசி தரூர்x page

"கட்சிப் பணிக்கும் தயார்.. இல்லைனா..” காங்கிரஸ் மீது அதிருப்தியா? சசி தரூர் சொல்வது என்ன?

கட்சிக்கு பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், அதில் விருப்பமில்லை எனில், தனக்கு வேறு விருப்பத் தேர்வுகள் இருப்பதாகவும் காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், திருவனந்தபுரம் எம்பியாகவும் இருப்பவர் சசி தரூர். இவர், சமீபகாலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியையும், கேரள இடதுசாரி அரசையும் அவர் சமீபத்தில் புகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கேரள மாநில காங்கிரஸ் தலைமை குறித்தும் விமர்சித்துளார். இதில், சசி தரூர் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். ஆனால், அதுகுறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து அளித்து பேட்டியிருந்தார். அதில், ”நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கறேன். கட்சிக்கு பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கும் வேறு விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன. கட்சி மாறுவது குறித்த வதந்திகளை மறுக்கிறேன். என்னை ஓர் அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த பேட்டி, கேரள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்கிற ஒரு கவிதை வரிகளையும் தனது தளத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kerala congress chief shashi tharoor spoke about other options
“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com