பேருந்தை நிறுத்தாத நடத்துநர் ! வித்தியாசமான தண்டனை அளித்த மாவட்ட ஆட்சியர்!

பேருந்தை நிறுத்தாத நடத்துநர் ! வித்தியாசமான தண்டனை அளித்த மாவட்ட ஆட்சியர்!
பேருந்தை நிறுத்தாத நடத்துநர் ! வித்தியாசமான தண்டனை அளித்த மாவட்ட ஆட்சியர்!

மாணவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு வித்தியாசமான தண்டனை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவின் வழிகடவு - பரப்பனங்கடி வழியில் செல்லும் தனியார் பேருந்து கொரம்பயில். இந்த பேருந்தில் நடத்துநராக பணியாற்றுபவர் ஷபீர் அலி. இவர் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தில் இறங்கவேண்டும் என மாணவர்கள் கூறியும் நடத்துநர் கண்டுக்கொள்ளவில்லை. 

பேருந்தில் இருந்தவர்களும் பேருந்தை நிறுத்தச்சொல்லி நடத்துநரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் யார் பேச்சையும் கேட்காத நடத்துநர் ஷபீர் பேருந்தை நிறுத்தவில்லை. இந்த விவகாரம் கல்வி அமைச்சர் வரை சென்றது. பேருந்து நடத்துநர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் கேள்வி எழுப்பினார். உடனடியாக பேருந்தை கண்டுபிடித்து பேருந்தை பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர் பேருந்து ஓட்டுநருக்கு வித்தியாசமான தண்டனையை அளித்தார்.

அதன்படி மலப்புரத்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துநர் ஷபீர் சேவைகளை செய்ய வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் பழகி அவர்களுக்கான தேவையை நடத்துநர் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த தண்டனை மூலம் குழந்தைகளின் உணர்வுகளை நடத்துநர் புரிந்துக் கொள்வார் என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com