\
கேரள முதல்வரின் வாகனம் விபத்துக்குள்ளானது
கேரள முதல்வரின் வாகனம் விபத்துக்குள்ளானதுபுதிய தலைமுறை

திடீரென பைக்கில் திரும்பிய பெண்... விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் வாகனம்!

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
Published on

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், எம்.சி. ரோட்டில் இருந்து அட்டிங்கல் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

முதலமைச்சர் இருந்த வாகனத்திற்கு முன்னும் பின்னும், அவரது பாதுகாப்பு பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. வாமனபுரம் பார்க் ஜங்ஷன் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, இந்த வாகனங்களுக்கு முன்பாக, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென வலது புறமாக திரும்பினார்.

கேரள முதல்வரின் வாகனம் விபத்துக்குள்ளானது
ஆம்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளை - பெண் உட்பட இருவர் கைது

இதனால் பின்னால் வந்துகொண்டிருந்த முதலமைச்சர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் சென்ற 5 வாகனங்கள், அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தினால், முதலமைச்சர் உள்பட வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. இருப்பினும் போக்குவரத்து விதியை மீறி அப்பெண் செயல்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com