\
எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வரின் மகள் திருமணம் !

எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வரின் மகள் திருமணம் !

எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வரின் மகள் திருமணம் !
Published on

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும் முகமது ரியாஸ் என்பவருக்கும் வீட்டிலேயே எளிமையான முறையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (டி.ஒய்.எஃப்.ஐ) தேசியத் தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோரின் திருமணம் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது.

கேரள முதலமைச்சரின் இல்லமான கிளிஃப் ஹவுஸில் நடைபெற்ற எளிய திருமண விழாவில், இரு தரப்பிலிருந்தும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாணவராக இருந்தபோது அரசியலில் நுழைந்து, சி.பி.ஐ.(எம்) இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயின் முன்னாள் தேசிய இணைச் செயலாளராக இருந்த பி.ஏ. முகமது ரியாஸ், கடந்த பிப்ரவரி 2017 இல் DYFI தலைவராக நியமிக்கப்பட்டார் கேரள முதல்வரின் மகளான வீணா தைக்கண்டியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com