பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை, அவசியமும் இல்லை !

பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை, அவசியமும் இல்லை !

பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை, அவசியமும் இல்லை !

சர்ச்சுகளில் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கேரளாவில் அண்மையில் சர்ச் பாதிரியார்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் முன் வைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்களிடமும், இவ்விவகாரங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது.  இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார். இதனையடுத்து நான்கு பாதிரியார்களில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்து , பின்பு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

மீதமுள்ள இரண்டு பாதிரியார்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தாற்காலிகமாக போலீஸாருக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தங்களது விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா "ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி ஒரு பெண்ணால் தன் அந்தரங்க வாழ்கை குறித்து பாதிரியாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். பாவ மன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது ஆண்களின் வாழ்கையையும் பாதிக்கும். பாவ மன்னிப்பை தவறாக பயன்படுத்தி மிரட்டும் சூழ்நிலை ஆண்களுக்கும் நேரலாம். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாதிரியார்கள், ஆண்களிடம் இருந்து பணம் பறிப்பார்கள்" என தெரிவித்துள்ளார் அவர்.

இது குறித்து மேலும் பேசிய ரேகா சர்மா " மதநம்பிக்கைகள் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக செல்லும் பட்சத்தில் அதில் நிச்சயம் மாற்றம் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக ஒரு ஆணுக்கு முன்பு பாவ மன்னிப்பு என்பது கூடவே கூடாது. எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்" என காட்டமாக தெரிவித்தார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com