\
kerala cabinet announcement VD Satheesan names ministers before swearing in
VD Satheesanx page

கேரளா | முதல்வராக வி.டி. சதீசன் நாளை பதவியேற்பு.. பங்கேற்கும் முதல்வர் விஜய்?

கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி.சதீசன், தனது 21 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்தார்.
Published on

கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக வி.டி.சதீசன் நாளை (மே 18) பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தவிர, தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற ரேஸ் நீண்டுகொண்டிருந்தது. இறுதியில் 25 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் கொண்ட, எதிர்க்கட்சித் தலைவராக இடதுசாரிகளுக்கு எதிராக களத்தை மாற்றிய விடி சதீசன், தேசிய தலைமையால் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

Student Politics to CM: The Journey of V.D. Satheesan
விடி சதீசன்Pt web

இந்த நிலையில், கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக வி.டி.சதீசன் நாளை (மே 18) பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் இதில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ள்து. தவிர, தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

kerala cabinet announcement VD Satheesan names ministers before swearing in
முதல்வராக பதவியேற்பு.. யார் இந்த வி.டி.சதீசன்? கேரள காங்கிரஸின் புதிய முகவரி

இதற்கிடையே, கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி.சதீசன், தனது 21 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்தார்.

விடி சதீசன்
விடி சதீசன்web

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அதன்படி, ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப், பிந்து கிருஷ்ணா, ஏ.பி.அனில் குமார், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு, ரோஜி எம்.ஜான், டி.சித்திக், ஓ.ஜே.ஜனீஷ், கே.ஏ.துளசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐயுஎம்எல்லைச் சேர்ந்த பிகே குன்ஹாலிக்குட்டி, பிகே பஷீர், என் ஷம்சுதீன், கேஎம் ஷாஜி மற்றும் விஇ அப்துல் கஃபூர் ஆகியோருக்கும், கேரள காங்கிரஸைச் சேர்ந்த மான்ஸ் ஜோசப், அனூப் ஜேக்கப் (ஜேக்கப்), ஆர்எஸ்பி-யைச் சேர்ந்த ஷிபு பேபி ஜான் மற்றும் சிஎம்பி-யைச் சேர்ந்த சிபி ஜான் ஆகியோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த சட்டமன்ற உறுப்பினர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனை சட்டமன்ற சபாநாயகராகவும், ஷானிமோல் உஸ்மானை துணை சபாநாயகராகவும் நியமிக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) முடிவு செய்துள்ளது.

உங்களுடைய பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொள்கிறாரா என விடி சதீசனிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இல்லை, அவர் வருவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை” என்று பதிலளித்தார்.

kerala cabinet announcement VD Satheesan names ministers before swearing in
கேரளா | முதல்வர் ரேஸில் 3 பேர்.. முடிவு ராகுல் கையில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com