கேரளாவில் புதிய மதுவிலக்கு கொள்கை: முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் புதிய மதுவிலக்கு கொள்கை: முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் புதிய மதுவிலக்கு கொள்கை: முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
Published on

கேரள மாநிலத்தில் மதுவிற்பனைக்கு கடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி முதலமைச்ச்ர் பினராயி விஜயன் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி 3 மற்றும் 4 நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்களில் மதுவி்ற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர விடுதிகளிலும் கள் விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதேபோல பார்கள் செயல்படும் நேரம் காலை 11 முதல் இரவு 11 மணியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை தளர்த்த நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்து. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் மதுக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டதையே தற்போதைய அனுபவங்கள் உணர்த்தியுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டார். மதுப்பழக்கத்தை இடதுசாரி முன்னணி அரசு ஆதரிக்கவில்லை என்று கூறிய அவர், அதே நேரத்தில் முழுமையான மதுவிலக்கிலும் எங்களுக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டார். ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் மதுக்கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும், முந்தைய அரசின் மதுவிலக்குக் கொள்கையால், மக்கள் வேறு போதைப் பழக்ககங்களுக்கு ஆளாக நேரிட்டதாகவும் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com