வெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்!

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்!

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்!
Published on

கேரளாவில் 100 ஆண்டுகள் வரலாறு காணாத மழை பெய்து, அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலமே வெள்ளத்தால் புரண்டு கிடக்கிறது. பல இடங்களிலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல், மாடிகளில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மனதை உருக்கும் பல சம்பவங்கள் அங்கு அரங்கேறிவிட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகளில் தேசியப் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான், கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அம்மாநில மீனவர்கள் களத்தில் குதித்தனர். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மீனவர்கள், அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் மக்களுக்காக உயிரை பணயம் வைத்து உதவ முன்வந்துவிட்டனர். இதுவரை கேரளாவில் மீட்கப்பட்ட மக்களில், அதிகமானோர் மீனவர்களால் மீட்கப்பட்டவர்கள் தான். ஒரு மீனவர் குடும்பப்பெண்களை குழந்தைகளுடன் மீட்கும் போது, முழங்கால் போட்டு உட்கார்ந்து தனது முதுகை படிக்கட்டாக்கினார். இந்தச் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச்செய்தது. அந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகியதால், இத்தனை பாராட்டுக்கள் குவிந்துள்ளன. ஆனால் கேமராக்களில் பதிவாகாமல், இதேபோன்று நூற்றுக்கணக்கான தியாங்கள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன.  

இந்தத் தியாகங்களை எல்லாம், எந்தச் சுயநலுமும் இன்றி செய்யும் அந்த மீனவர்களுக்கு தற்போது தேசிய அளவில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்கள் முதல் பட்டித்தொட்டி வரை இவர்களைத் தான் அனைவரும் பாராட்டி வருகின்றனர். தங்கள் மீட்புப்பணிகள் குறித்து கூறும் மீனவர்கள், “எங்களால் குறுகிய வழியில் கூட செல்ல முடியும். எங்கள் படகில் இரண்டு பேர் இருப்பார்கள். அவர்களுடன் இஞ்சின்  டிரைவர், வழிகாட்டி, உதவியாளர் இருப்பார்கள். அவர்களோடு சேர்த்து மேலும் 10 பேரை படகில் ஏற்றி பாதுகாப்பாக கொண்டு வர முடியும். 50 செ.மீக்கு மேல் தண்ணீரின் ஆழம் இருந்தாலே படகு செல்வது ஏதுவாக இருக்கும்” என்கின்றனர்.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த நிலையிலும், சுமார் 600 படகுகளில் வந்து மீட்பு பணியில் ஈடுபடும் மீனவர்களே உண்மையான ஹீரோக்கள் என கேரளாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் கேஜே அல்போன்ஸ் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com