வால்பாறை அருகே கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காட்டு யானை ஒன்று சிக்கிக் கொண்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் அருகில் உள்ள பெருங்கள்குத்து என்ற அணையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பில்லபார என்ற இடத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து வருகிறது. இதையடுத்து கேரள வனத் துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.