கேந்திரிய வித்யாலயாவில் கட்டாய கன்னடம் - மத்திய அமைச்சருக்கு கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் கட்டாய கன்னடம் - மத்திய அமைச்சருக்கு கடிதம்
கேந்திரிய வித்யாலயாவில் கட்டாய கன்னடம் - மத்திய அமைச்சருக்கு கடிதம்

கர்நாடகாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயமாக கன்னட மொழியை பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கன்னட மேம்பாட்டு ஆணையத் தலைவர் எஸ்ஜி சித்தராமையா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் கன்னட மொழியை பயிற்றுவிக்க தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். எனவே கர்நாடகாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயமாக கன்னட மொழியை பயிற்றுவிக்க, கர்நாடகா பிராந்திய கேந்திரிய வித்யாலயா தலைவருக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் சார்பில், கர்நாடகாவில் உள்ள 50 பள்ளிகளில் கன்னட மொழியை பயிற்றுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அதாவது பள்ளிகளில் கன்னடம் கற்க ஆசைப்படும் மாணவர்களின் பற்றாக்குறை, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com