\
நீட்
நீட்pt web

நீட் மறுதேர்விலும் முறைகேடா? ஏழைக் குழந்தைகள் நீதிக்கு எங்கே போவார்கள்? கெஜ்ரிவால் கேள்வி.!

நீட் மறுதேர்விலும் முறைகேடா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on
Summary

நீட் மறுதேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன. ஏழை மாணவர்கள் நீதிக்காக எங்கே போவார்கள் என கேஜ்ரிவால் மத்திய அரசை சாடுகிறார். கடந்த 12 ஆண்டுகளில் நாட்டை பாழாக்கிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்ட, மாணவர்கள், பெற்றோர்கள் மீண்டும் போராட்ட மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகளிலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான NSUI தனது எக்ஸ் பதிவில், "நீட் வினாத்தாள் கசிவைத்தொடர்ந்து, தற்போது நடத்தப்பட்ட நீட்மறுதேர்விலும் முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. மோடி அரசு இந்தியாவின் எதிர்காலத்தூண்களான குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலும் சீரழித்துவருகிறது." என பதிவிட்டுள்ளது.

மேலும் டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மிகட்சியின் தலைவருமான அரவிந்த்கெஜ்ரிவால் மத்திய அரசை நோக்கிப் பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்: "நீட் மறுதேர்வு முடிவுகளிலும் தற்போது மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழைக் குழந்தைகள் தங்களது நீதிக்கு எங்கே போவார்கள்? மோடி அவர்களே, உங்களால் ஒருதேர்வைக் கூட ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால், இந்தநாட்டை எப்படி நடத்துவீர்கள்? கடந்த 12ஆண்டுகளில் ஒட்டுமொத்த நாட்டையுமே நீங்கள் பாழாக்கிவிட்டீர்கள். "மறுதேர்விலும் முறைகேடுகள்நடந்துள்ளதாக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டுகள், மருத்துவப் படிப்பிற்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே மீண்டும் பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நீட்
தொடர் சர்ச்சையில் நீட்.. தவறான கேள்விக்கு மதிப்பெண்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com