உருமாறிய கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கெஜ்ரிவால்

உருமாறிய கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கெஜ்ரிவால்

உருமாறிய கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கெஜ்ரிவால்
Published on

உருமாறிய கொரோனா பல்வேறு உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது; முந்தைய வைரஸ்களை விட இவை மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா மண்டலத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளான கனடா, பிரிட்டன் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. அமெரிக்காவும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளி்ல் இருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வைத்துள்ள கோரிக்கையில், புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் , பெரும் சிரமங்களுக்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் புதியவகை கொரோனா பாதிப்பை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com