\
திலீப்பால் பலன் பெற்றவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்: கேரள எம்எல்ஏ

திலீப்பால் பலன் பெற்றவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்: கேரள எம்எல்ஏ

திலீப்பால் பலன் பெற்றவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்: கேரள எம்எல்ஏ
Published on: 

நடிகர் திலீப்பிடம் ஆதாயம் பெற்றவர்கள் தற்போது அவரை ஆதரிக்க வேண்டும் என கேரள எம்எல்ஏ கணேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

நடிகை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் திலீப்பை சந்தித்து பேசிய பின் கணேஷ் குமார், திலீப்பால் பலன் பெற்றவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார். தங்களிடமும் விசாரணை நடக்குமோ என்ற அச்சத்தில் பலரும் திலீப்பிடம் இருந்து ஒதுங்கிவிட்டதாக கணேஷ் குமார் தெரிவித்தார். ஒரு வழக்கில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை எந்த ஒரு கைதியையும் குற்றவாளியாக கருதுவது தவறு என்றும் கணேஷ் குமார் தெரிவித்தார். கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் திலீப் 55 நாட்களாக சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் கேரள உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com