ஏடிஎம் இயந்திரத்தையே திருடிச்சென்ற கொள்ளையர்கள்

ஏடிஎம் இயந்திரத்தையே திருடிச்சென்ற கொள்ளையர்கள்

ஏடிஎம் இயந்திரத்தையே திருடிச்சென்ற கொள்ளையர்கள்
Published on

காஷ்மீரில் ஏடிஎம் மையத்துக்கு பணத்தை திருட வந்த கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தையும் சேர்த்து திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கதுவா மாவட்டத்தில் உள்ள சான் ரோரியன் பகுதியில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அமைந்துள்ளது. ஏடிஎம் ‌மையத்துக்கு பணத்தை கொள்ளையடிக்க வந்த திருடர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் போனதால் இயந்திரத்தை அலேக்காக தூக்கி கொண்டு தப்பியோடியுள்ளனர். 

கொள்ளையர்களால் தூக்கிச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் இருந்ததாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com