
காஷ்மீர் பிரச்னைக்கு வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காஷ்மீர் மட்டுமின்றி பயங்கரவாதம் மற்றும் நக்சல்கள் பிரச்னை போன்றவையும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைக் கற்களாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். இவை அனைத்திற்கும் 2022-க்குள் தீர்வு காணப்பட்டுவிடும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய இந்தியாவை உருவாக்கவே தாங்கள் பாடுபட்டு வருவதாகவும் ராஜ்நாத் தெரிவித்தார்.