\
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்
Published on

காஷ்மீர் பிரச்னை குறித்து அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக, உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ்வர் சர்மா கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016 வரை ஐ.பி. உளவுத்துறையின் இயக்குநராக பணியாற்றிவர் ஆவார். கடந்த 2002ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் காஷ்மீர் பிரச்னை குறித்து நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவில், 4வது சிறப்புப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சிறப்பு பிரதிநிதியாக தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். காஷ்மீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, சர்மா அனைவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதற்கான அதிகாரமும் சுதந்திரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com