\
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: அப்பாவி பெண் பலி!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: அப்பாவி பெண் பலி!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: அப்பாவி பெண் பலி!
Published on

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பயங்கரவாதி ஒருவனை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் டிரால்சீர் என்ற பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பாவி பெண் ஒருவர் குண்டுபாய்ந்து உயிரிழக்க நேரிட்டது. தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹாஜின் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி, ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். அந்த பயங்கரவாதி வைத்திருந்த துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மேலும் அந்தப் பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா என்று பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com