காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 6 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 6 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 6 பயங்கரவாதிகள் பலி
Published on

காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீ‌ரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். அத்துடன் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சாகிர் ரெஹ்மான் லக்வியின் மருமகன் உள்ளிட்ட 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com