காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

காஷ்மீர் மாநிலம் புத்காமில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் கைபற்றினர்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் புத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com