இந்தியா
காஷ்மீரில் சக வீரர்களை சுட்ட இந்திய பாதுகாப்புப்படை வீரர் - இருவர் பலி
காஷ்மீரில் சக வீரர்களை சுட்ட இந்திய பாதுகாப்புப்படை வீரர் - இருவர் பலி
காஷ்மீரில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர், சக வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
ஜம்மூ-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கிருந்த வீரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பொறுமையை இழந்த வீரர் ஒருவர், சக வீரர்களின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.என்.மூர்த்தி மற்றும் முகமது தஸ்லீம் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வீரரான சஞ்சய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.