\
தேசிய பிரச்னைகளை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது - கார்த்தி சிதம்பரம்

தேசிய பிரச்னைகளை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது - கார்த்தி சிதம்பரம்

தேசிய பிரச்னைகளை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது - கார்த்தி சிதம்பரம்
Published on

ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்புவதற்காகவே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மத்திய அரசு கைது செய்திருப்பதாக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை, திகார் சிறையில் அடைப்பதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்த சிறையிலேயே சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அரசியல் பழிவாங்கல் காரணமாக போதிய ஆதாரங்கள் இன்றி, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் காஷ்மீர் விவகாரம், பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com