கர்நாடகா மாநிலத்திற்கென்று தனிக்கொடியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடாகா மாநிலத்திற்காக தனிக்கொடி ஒன்றை ஏற்படுத்த முதலமைச்சர் சித்தராமையா கடந்த 2017-ம் ஆண்டு குழு ஒன்றை அமைத்திருந்தார். அக்குழு வடிவமைத்துள்ள கொடியை இன்று அவர் அறிமுகம் செய்து வைத்தார். தேசியக்கொடியில் இருப்பது போன்று மூவர்ண நிறத்தில் இக்கொடி உருவாகியுள்ளது. மேலே மஞ்சள் நிறத்திலும், இடையில் வெள்ளை நிறத்திலும், கீழே சிவப்பு நிறத்திலும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியின் நடு பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.
மஞ்சள் நிறம் மன்னித்தலையும், வெள்ளை நிறம் அமைதியையும், சிவப்பு நிறம் வீரத்தையும் போதிப்பதாக கூறப்படுகிறது. இந்தக்கொடி தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.