துங்கபத்ரா அணை
துங்கபத்ரா அணைஎக்ஸ் தளம்

கர்நாடகா | துங்கப்தரா அணையின் 19வது மதகு உடைப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகாவில் துங்கபத்ரா அணையின் 19வது மதகு உடைந்ததால், ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Published on

கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில், அம்மாநிலத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்று, துங்கபத்ரா. இந்த அணையும் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில்தான் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அணையின் 19வது மதகின் செயின் லிங்க் திடீரென்று உடைந்தது.

இதனால் அணையில் இருந்து கிட்டத்தட்ட விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதைத் தொடர்ந்து, அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுவதால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து எப்போது வேண்டுமானாலும் விநாடிக்கு 3 லட்சம் கன அடியை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க: மீண்டும் புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை| “உள்நோக்கம் கொண்டது” - அதானி குழுமம் விளக்கம்!

துங்கபத்ரா அணை
76 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம் - தண்ணீரில் மூழ்கிய ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை

இதன் காரணமாக, கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கோப்பல், விஜயநகரா, பெல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 33 மதகுகளும் திறக்கப்பட்டு அவற்றின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உடைந்துள்ள கதவினை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதுது. 105 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால்தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என அம்மாநில அமைச்சர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”எல்லாமே அமெரிக்காவின் சதி; என் பேச்சை திரித்து வன்முறையை உருவாக்கினார்கள்”-மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா

துங்கபத்ரா அணை
மளமளவென குறையும் மேட்டூர் அணை: தண்ணீரில் தலைகாட்டும் நந்தி சிலை – காண குவியும் சுற்றுலா பயணிகள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com