கணவனை காலணியால் அடித்த மனைவி
கணவனை காலணியால் அடித்த மனைவிpt desk

கர்நாடகா | இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கணவனை காலணியால் அடித்த மனைவி..!

கர்நாடகாவில் இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கணவனை காலணியால் அடித்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், நாமதி தாலுகாவின், முஷேனாளா கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஜா (30) சிக்கமகளூரு மாவட்டம், அரசிகெரே தாலுகாவின், திப்பகட்டா கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக் நாயக் (32) இவர்கள் பரஸ்பரம் காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே, வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கார்த்திக் துன்புறுத்த துவங்கினார். கணவரின் தொந்தரவை தாங்க முடியாமல், தனுஜா தன் தாய் வீட்டுக்குச் சென்று, பணம் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

திருமணம்
திருமணம்

இதனால் திருப்தி அடையாமல், மேலும் பணம் வாங்கி வரும்படி நச்சரிக்கத் துவங்கினார். மனைவி வீட்டினரிடம் பணம் இல்லை என, கூறியுள்ளார். வரதட்சணைக்காக, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள கார்த்திக் நாயக் முடிவு செய்தார். இதையடுத்து தான் ஊருக்கு செல்வதாக சென்று, திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். இதையடுத்து சித்ரதுர்கா நகரில் உள்ள காயத்ரி மண்டபத்தில் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்று வந்துள்ளது.

கணவனை காலணியால் அடித்த மனைவி
ராமநாதபுரம் | காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்து – சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

இதுகுறித்து, எப்படியோ முதல் மனைவி தனுஜாவுக்கு தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து தன் பெற்றோருடன் திருமண மண்டபத்துக்கு வந்து, தனக்கு துரோகம் செய்த கார்த்திக் நாயக்கின் சட்டையைப் பிடித்து, காலணியால் அடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மணப்பெண்ணின் குடும்பத்தினரும் அவரை அடித்ததோடு , திருமணத்தையும் நிறுத்தினர். தகவல் அறிந்து மண்டபத்துக்கு வந்த சித்ரதுர்கா நகர் போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com