\
கர்நாடக விவசாயிகளின் ரூ.816 கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி

கர்நாடக விவசாயிகளின் ரூ.816 கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி

கர்நாடக விவசாயிகளின் ரூ.816 கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி
Published on

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தமது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதாவது, கூட்டுறவு வங்கிகளில் ஜூன் 20ம் தேதி வரை வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் வரையிலான விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் 22 லட்சத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பெற்ற 816 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது மாநிலத்தில் உள்ள 20 சதவீதம் விவசாயிகளுக்கு மட்டுமே பலனளிக்கும் என தெரிவித்துள்ள சித்தராமைய்யா, எஞ்சிய 80 சதவீத விவசாயிகள் வணிக வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய மத்தியஅரசு முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com