7 தலை நாகத்தின் சட்டை? பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்!
7 தலை நாகத்தின் சட்டை கர்நாடக மாநில கிராமம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, அதை கிராம மக்கள் பொட்டு, பூ வைத்து வணங்கி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கனகபுராவில் உள்ள கிராமம் மரிகவுடனா டோடி. இங்குள்ள கோயிலுக்கு அருகே, பாலப்பா என்பவரது நிலத்தில், பாம்புச் சட்டை ஒன்று கிடந்தது. இது, ஏழு தலைகளை கொண்ட நாகத்தின் சட்டைப் போல காணப்பட்டது. இதனா ல் அதன் அருகில் இருந்த கல்லில் பொட்டு, பூ வைத்து அப்பகுதி மக்கள் வழி பட தொடங்கினர். இந்த செய்தி அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவ, அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இதைப் பார்த்துச் செல்கின்றனர். ஏழு தலை நாகத்தின் சட்டை தொடர் பான வீடியோ, இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி அங்குள்ள ஒருவர் கூறும்போது, ‘’ ஆறு மாதத்துக்கு முன் இதே பகுதியில் ஏழு தலை நாகத்தின் சட்டையை பார்த்தோம். இப்போது மீண்டும் பார்த்துள்ளோம். அதனால் ஏழு தலை நாகம் இந்தப் பகுதியில் இருப்பது உண்மைதான்’ என்றார்.
இந்து புராண கதைகளில் ஏழு தலை கொண்ட பாம்புகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அத்தனை தலைகளுடன் நாகம் இல்லை என்றே கூறப்படுகிறது.