கர்நாடகா: கொரோனா காலகட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு.. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை!

கர்நாடகாவில் கொரோனா காலகட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ‘காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடு புகார்களை விசாரணை நடத்த குழு அமைக்கப்படும்’ என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்
பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்

அதைச் செயல்படுத்தும் வகையில் தற்போது ஒவ்வொரு முறைகேடு புகாருக்கும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, கொரோனா காலத்தில் செலவிடப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சித்தராமையா
சித்தராமையா twitter

மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரணை நடத்தி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com