
கபினியில் வனப்பகுதியில் கரடி, புலியை விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கபினி வனப்பகுதியில் கரடி ஒன்று புலியை விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காட்சியில் புலியும், கரடியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட போது, கரடி புலியை எந்த அச்சமும் இன்றி விரட்டுகிறது. புலியும் கரடிக்கு பயந்து ஓடுவது அந்த காட்சியில் பதிவாகியுள்ளது.