கர்நாடகா: 10 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த கொடூரம்

கர்நாடகா: 10 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த கொடூரம்
கர்நாடகா: 10 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த கொடூரம்

பெங்களூரு புறநகர் பகுதியான நெரலூர் கிராமத்தில் 10 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்து சடலத்தை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்ற வட மாநில பெண்ணை போலீசார் தேடி வருகின்றன.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே நெரலூர் கிராமத்தில் உள்ள அம்பரீஷ் என்பவரது அடுக்குமாடி வீட்டில் கர்நாடக மாநிலம் சிரசி பகுதியைச் சேர்ந்த பர்வதம்மா மற்றும் அவருடைய மகன் ரமேஷ், மனைவி ஜோதி ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், அதே அடுக்குமாடி மூன்றாவது தளத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாவல்கான் என்ற பெண் குடியிருந்ததாக சொல்லப்படுகிறது. மூதாட்டி பார்வதம்மா அவ்வப்போது பாவல்கான் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மூதாட்டி பார்வதம்மா திடீரென்று மாயமானார். இதையடுத்து காணாமல் போன பார்வதம்மாவை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மகன் ரமேஷ் அத்திபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார் ரமேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பார்வதம்மாவை தேடினர்.

இதையடுத்து மூன்றாவது மாடியில் பாவல் கான் வாடகைக்கு இருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பாவல்கான் வீடு பூட்டி இருந்தது. இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் பாவல்கானை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அத்திப்பள்ளி போலீசார் வீட்டின் உரிமையாளர் அம்பரீஷ்க்கு தகவல் தெரிவித்து, மற்றொரு சாவியை எடுத்து வந்து பாவல்கான் வீட்டின் பூட்டை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது பீரோவை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மூதாட்டி பார்வதம்மாவை கொலை செய்த பாவல்கான் தங்க நகைகள் திருடிவிட்டு உடலை சாக்குப் பையில் கட்டி பீரோவில் வைத்து பூட்டி தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பர்வதம்மாவின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக ஆனேகல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொலை செய்து பிணத்தை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்ற வடமாநில பெண்ணை அத்திப்பள்ளி போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com