\
ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் நீட் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
Published on: 

ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. வழக்கமாக ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூருவிற்கு காலை 7 மணிக்கு வந்துவிடும். ஆனால் இன்று அதற்கு மாறாக காலதாமதமாக மதியம் 2.36 மணிக்கே ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூரு வந்தடைந்தது. இதனால் அதில் பயணித்த மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதப்படும் என தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி விஜயா தெரிவித்திருந்தார். 

அதேபோல இந்த விவகாரத்தில பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தலையிட்டு, தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாராசமி வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கர்நாடகா மாநிலத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com