“நான்தான் இந்த உலகின் அதிர்ஷ்டசாலி” - ராம் லல்லா சிலையின் சிற்பி பெருமை

”நான்தான் இந்த உலகிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி” என்று ராமர் சிலை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம்
சிற்பி அருண் யோகிராஜ்
சிற்பி அருண் யோகிராஜ் புதிய தலைமுறை

அயோத்தியில் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை நடைபெற்று வரும் சூழலில், அங்கு வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் அந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்நான்தான் இந்த உலகிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி” என்று தெரிவித்துள்ளார். ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷ் இவரைப் பற்றி தெரிவிக்கையில், “ராமர் எங்கே இருக்கிறாரோ அங்கேயே அனுமனும் இருக்கிறார். ராமரையும் அனுமனையும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்றார்போல அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானதில் தவறில்லை” என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com