'உச்சநீதிமன்றத்தில் தடை கோருவோம்' : காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு

'உச்சநீதிமன்றத்தில் தடை கோருவோம்' : காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு
'உச்சநீதிமன்றத்தில் தடை கோருவோம்' : காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு

காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கனவுத் திட்டமான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையை பிறப்பித்தது. திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை ஆறாயிரத்து 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படுகிறது.

அதாவது காவிரியில் உபரியாக வெளியேறும் நீரைக் கரூரின் மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாகக் குண்டாற்றுடன் இணைக்கப்படும். இதன் மூலம் இடைப்பட்ட மாவட்ட மக்கள் பயன்பெறுவர். நீண்டகால கோரிக்கையாக இருந்த இந்த திட்டத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆனால் காவிரியின் உபரிநீரை கொடுக்கமாட்டோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இந்நிலையில் அதே கருத்தை கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிஹோலி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடனான சந்திப்புக்கு பின் பேசிய அவர், காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் ஏற்காது எனத் தெரிவித்துள்ளார். மேகதாது வழக்கின்போதே காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை கோருவோம் என அவர் குறிப்பிட்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com