\
நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் சட்ட சிக்கல் - கர்நாடக காவல்துறை

நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் சட்ட சிக்கல் - கர்நாடக காவல்துறை

நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் சட்ட சிக்கல் - கர்நாடக காவல்துறை
Published on

நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாக கர்நாடக மாநி‌ல காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டுவரும் நித்யானந்தா, சமூக வலைதளங்களில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். வழக்கு ஒன்றில் அவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி, கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடு 18ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக கர்நாட‌கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாகவே, சிபிஐ மற்றும் இன்டர்போலின் உதவியை நாடி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் நித்யானந்தாவை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருவதாக கூறியுள்ள அதிகாரிகள், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com