தேர்தல் பாதுகாப்பிற்கிடையே குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த காவல் அதிகாரி
கர்நாடகாவில் தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது காவல் அதிகாரி ஒருவர் குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வரும் மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக 116 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 26 மக்களவை தொகுதிகளை கொண்ட குஜராத் மற்றும், மக்களவை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவிற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன் மகாராஷ்டிராவில் வாக்குகள் மந்தமாக பதிவாகி வருகின்றன.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க குழந்தையுடன் வந்த தாய் வாக்குப்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதை கவனித்த காவல் அதிகாரி விதேஷ் குமார் என்பவர் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டார். அவர் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.