கர்நாடகா: அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை 15 நாட்களில் அகற்ற உத்தரவு

கர்நாடகா: அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை 15 நாட்களில் அகற்ற உத்தரவு
கர்நாடகா: அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை 15 நாட்களில் அகற்ற உத்தரவு

கர்நாடகாவில் அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் மசூதிகளில், ஒலிப்பெருக்கியில் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர், கோயில்களிலும் ஒலிப்பெருக்கி அமைத்து பாடல்களை ஒலிப்பரப்பத் தொடங்கியுள்ளனர். இது குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து ஒலி மாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு அம்மாநில தலைமை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com