"கார் விற்கும் போதெல்லாம் கமிஷன் கொடுக்க வேண்டும்" - பழைய கார் விற்பனையாளரை மிரட்டி சித்ரவதை

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் பணத்திற்காக பழைய கார் விற்பனையாளர் உட்பட மூன்று பேரை அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டம் சேடம் தாலுகா தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் மடிவால. இவர், பெங்களுரில் இருந்து பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அர்ஜதின் மடிவாலாவை தொடர்பு கொண்ட ரமேஷ் என்பவர், கார் வேண்டும் என்றும் காரை ஹாராகார கிராஸ் பகுதிக்கு கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

Attack
Attackpt desk

இதையடுத்து அர்ஜுன் தனது நண்பர்கள் இருவருடன் காரை எடுத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார். அப்போது ரமேஷ், “காரை வாங்குபவர் முன்னாடி இருக்கிறார். அவர் காரை ஓட்டிப் பார்த்துதான் வாங்குவார். அங்கே போகலாம் ”எனக் கூறி மூன்று பேரையும் அழைத்துச் சென்றுள்ளார், பிறகு ஏதோ ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தியபோது அங்கு, இம்ரான் பட்டேல், மஹம்மத் மதீன், உள்பட பலர் அர்ஜுன் மற்றும் அவருடைய நண்பர்களை பிடித்து அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

Accused
ஒசூர்: கால்நடைத் தீவன தொழிற்சாலைக்குள் கஞ்சா செடிகள்- வடமாநில தொழிலாளி கைது

இதையடுத்து அவர்களை அடித்து உதைத்து, பணத்தை ஆன்லைன் மூலம் வங்கிக்கு கொண்டு, கூடுதலாக பணம் தேவை என்று அவரை நிர்வாணப்படுத்தி ஆண் உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி தொந்தரவு செய்துள்ளார். மேலும் “கார் விற்கும் போதெல்லாம் எங்களுக்கு கமிஷனாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்” என மிரட்டியுள்ளனர். அப்படி கொடுக்காவிட்டால் வீடு புகுந்து கொலை செய்துவிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.

Arrested
Arrestedpt desk

இது குறித்து தகவல் அறிந்து வந்த விஷ்வ வித்யாலயா போலீசார், வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Accused
திண்டுக்கல்: பெண் சடலத்துடன் சுற்றிய கார்; போலீசார் சோதனையில் மாட்டிக்கொண்ட நபர்கள்.. நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com