Raj Bhavanpt desk
இந்தியா
கர்நாடகா: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் - போலீசார் தீவிர விசாரணை!
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசி மூலம் மிரட்டிய நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் உள்ள நிலையில், நேற்றிரவு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போன் செய்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
Raj Bhavan karnatakapt desk
இதைத் தொடர்ந்து ராஜ்பவனில் சோதனையிட்ட போலீசாருக்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே எந்த எண்ணில் இருந்து ராஜ்பவனுக்கு தொலைபேசி மிரட்டல் வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.