\
கருப்பு பூஞ்சையால் மனைவி மரணம்: 4 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்

கருப்பு பூஞ்சையால் மனைவி மரணம்: 4 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்

கருப்பு பூஞ்சையால் மனைவி மரணம்: 4 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்
Published on

கர்நாடகாவின் பெலகவி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல் 46 வயதுடைய கணவர், அவரது 4 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவிற்கு உட்பட்ட போரகல் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதுகோவிட்-19 தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை பாதித்து தனது மனைவி ஜெயா உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத கோபாலா (46), தனது பிள்ளைகள் சௌமியா (19), ஸ்வேதா(16), சாக்ஷி(11) மற்றும் ஸ்ருஜன்(8) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு அவரும் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

"அவரும் அவரது குழந்தைகளும் ஜெயா இல்லாமல் வாழ முடியாது என்று கூறிக்கொண்டே இருந்தனர், இதனால் இந்த முடிவினை எடுத்துள்ளனர்" என்று உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com