\
காதலியை கொன்று புதைத்துவிட்டு அருகிலேயே தூக்கில் தொங்கிய காதலன்.. கர்நாடகாவில் பரபரப்பு

காதலியை கொன்று புதைத்துவிட்டு அருகிலேயே தூக்கில் தொங்கிய காதலன்.. கர்நாடகாவில் பரபரப்பு

காதலியை கொன்று புதைத்துவிட்டு அருகிலேயே தூக்கில் தொங்கிய காதலன்.. கர்நாடகாவில் பரபரப்பு
Published on

மைசூர் அருகே காதலியைக் கொன்று புதைத்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவ்வப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை இவர்கள் இருவரும் அருகிலுள்ள சுற்றுலா இடமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சித்த ராஜு திடீரென தன் காதலி சுமித்ராவை கொலை செய்துவிட்டு அவரது உடலை புதைத்து விட்டு, பின்னர் அவரும் அதே இடத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்தப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், தூக்கில் தொங்கியவாறு இருந்த சடலத்தைக் கண்டு, தலக்காடு போலீசாருக்கு தகவல் அளித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com