பயணியை மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளிய கர்நாடக எஸ்.ஆர்.டி.சி பேருந்து நடத்துனர்!

பயணியை மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளிய கர்நாடக எஸ்.ஆர்.டி.சி பேருந்து நடத்துனர்!
பயணியை மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளிய கர்நாடக எஸ்.ஆர்.டி.சி பேருந்து நடத்துனர்!

கர்நாடக மாநில கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்து நடத்துனர் பயணி ஒருவரின் மார்பில் உதைத்து பேருந்தில் இருந்து வெளியே தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தென்கன்னட மாவட்டத்தில் சுள்யா புத்தூர் தாலுகா ஈஸ்வரமங்களாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நடத்துனர் பயணி ஒருவரின் மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் நேற்று நடந்துள்ளது.

ஈஸ்வரமங்களா நகரின் சந்திப்பில் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட நபர், பேருந்தின் நடத்துனர் சுப்புராஜ் ராய் என அடையாளம் காணப்பட்டார். குடிபோதையில் இருந்த அந்த பயணி பேருந்தில் ஏறும்போது நடத்துனர் பயணியை தடுத்து நிறுத்தி அவரின் குடையை பிடிங்கி சாலையில் வீசியுள்ளார்.

அப்போது பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறிய நடத்துனர். பயணியை கையால் தாக்கி வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டு, இறுதியில், பயணியின் மார்பில் காலால் உதைத்து சாலையில் தள்ளினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவியதால், பேருந்து நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புத்தூர் கேஎஸ்ஆர்டிசி கோட்டக் கட்டுப்பாட்டாளர் ஜெயகர ஷெட்டி கூறுகையில்... பேருந்தில் இருந்தவரின் உடல்நிலை என்னவாக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க, எந்த நிர்வாகிக்கும் அதிகாரம் இல்லை. நிர்வாகி செய்தது தவறு. அவரை இன்று கர்நாடகா போக்குவரத்து கழகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் பயணிக்கு ஆகும் மருத்துவ செலவை கர்நாடக போக்குவரத்து கழகம் கேஎஸ்ஆர்டிசி செலுத்தும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com