ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு... பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு... பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு... பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

தற்போது விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக வரும் 21-ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் தக்‌ஷின் கன்னடா, ஷிவ்மோகா, கலபுர்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com