கர்நாடகா: அரை நிர்வாணமாக்கி அம்பேத்கர் படத்துடன் பள்ளி மாணவனை ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலம்

கர்நாடக மாநிலம் கலபுரகியில், பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி, சக மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
School student
School studentpt desk

கலபுரகி நகரில் பள்ளி மாணவர் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில், குடியரசு தினத்தை ஒட்டி, நேற்று காலை அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் பங்கேற்கவில்லை என தெரியவருகிறது.

School student
School studentpt desk

இதனால் கோபமடைந்த சக மாணவர்கள், அந்த மாணவரைத் தாக்கி, அரை நிர்வாணமாக்கினர். இதையடுத்து அவரின் கையில் அம்பேத்கர் உருவப் படத்தைக் கொடுத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை பலரும் கண்டித்துள்ள நிலையில், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அசோக்நகர் போலீசார், மாணவனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com