கர்நாடகா: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க உதவி எண் அறிமுகம்

கர்நாடகா: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க உதவி எண் அறிமுகம்
கர்நாடகா: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க உதவி எண் அறிமுகம்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கான எரிதளத்தின் தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய உதவி எண்ணை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. 

பெங்களூருவில் உள்ள பீன்யா, கெங்கேரி, சம்மனஹள்ளி, பனதூர் உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள எரிதளங்களில் முன்பதிவு செய்த உடல்களை எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இந்த எரிதளங்களில் 500 உடல்கள் வரை எரிக்க முடியும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனை அல்லது வீட்டில் உயிரிழக்கும் பட்சத்தில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய +91 8495998495 என்ற உதவி எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியோ எரிதளத்தின் தேவையை பதிவு செய்யலாம்.

அதில் தகனம் செய்யப்படவேண்டிய இடம், நேரம் உள்ளிட்ட இதர தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். அதனை பெறும் நிர்வாகம் எஸ்.எம்.எஸ் வழியாக தகனம் செய்வதற்கான டோக்கன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும். இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்  அதற்கான தீர்வை வழங்குவர். உடலை எரிதளத்திற்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸூக்கோ, எரியூட்டும் எரிதளத்திற்கோ கட்டணம் கொடுக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com