\
பத்திரிகையாளர் கவுரி படுகொலை: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

பத்திரிகையாளர் கவுரி படுகொலை: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

பத்திரிகையாளர் கவுரி படுகொலை: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு
Published on: 

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் கொலையாளி பற்றிய விவரங்களை அளிப்பவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு தொலைபேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் பெங்களூரு போலீசார் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். முன்னதாக கவுரி கொலை தொடர்பான விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வை முதலமைச்சர் சித்தராமையா மேற்கொண்டார். இதில் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் பி.கே.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com