நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துக - கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் 

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துக - கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் 

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துக - கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் 
Published on

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பரிசீலிக்கமாறு கர்நாடக ஆளுநர் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கூடிய சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. 

இதனால் பாஜகவினருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேண்டுமென்றே சபாநாயகர் வாக்கெடுப்பை தாமதம் செய்வதாக பாஜக எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து அவை கூடியபோது ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பரிசீலிக்கமாறும், முதலமைச்சர் அவை நம்பிக்கையை எப்போதும் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவை நடவடிக்கையை கண்காணிக்க ஆளுநர் சிறப்பு அதிகாரியும் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ள்ளார். கடிதத்தை சபாநாயகர் படிக்கும்போது காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com